கிளிநொச்சி மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான விவசாய குழுக்கூட்டம்
கிளிநொச்சி மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான விவசாய குழுக்கூட்டம் இன்று (26-03-2026) வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலக மாநாடு மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாயத் துறைசார்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.
குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் எதிர்வரும் சிறுபோக விவசாய செய்கையின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய தீர்மானங்கள் எரிபொருள் விநியோகம் உரக்கொள்வனவு என்பன பற்றி இங்கு கலந்துரையாடப்பட்டன.

விளக்கமளிப்பு
இதன்போது விவசாயத்துறையுடன் தொடர்புடைய திணைக்களங்களினால் துறைசார்ந்து தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற திட்டங்கள் தொடர்பில் துறைசார்ந்த திணைக்களத் தலைவர்களால் விளக்கமளிக்கப்பட்டன.
கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்ட பதில் விவசாய பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர், நீர்ப்பாசன பொறியியலாளர்கள், கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர், பிரதி மாகாண விவசாய பணிப்பாளர், யாழ். பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் பதவிநிலை உத்தியோகத்தர் மாவட்ட செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர், துறை சார்ந்த பல்வேறு திணைக்களங்களின் அதிகாரிகள் மற்றும் விடயதான உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்புக்களின் அங்கத்தவர்கள், மாவட்ட விவசாய பிரிவின் உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

