கிளிநொச்சியில் 60 வயதுக்கு மேற்பட்டோர் தொடர்பில் வெளியான தகவல்
கிளிநொச்சி மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோரில் 7000 பேர் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை என சுகாதார வைத்திய அதிகாரி சரவணபவன் தெரிவித்துள்ளார்.
60 வயதுக்கு மேற்பட்டோருக்கான நடமாடும் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்த பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கிளிநொச்சி மாவட்டத்தில் இன்றைய தினம் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் 18 ஆயிரம் பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்கின்றனர்.
அவர்களில் ஏறத்தாழ 11 ஆயிரம் பேர் மாத்திரமே தடுப்பூசி பெற்றுள்ளனர். மிகுதியான 7 ஆயிரம் பேர் வரை தடுப்பூசி போடாமல் இருக்கின்றார்கள்.
தடுப்பூசி திட்டம் ஒரு மாத காலம் நீடித்தும் அவர்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளவில்லை. அவர்களிற்கு வேறு வேறு காரணங்கள் இருக்கலாம்.
இந்த நிலையில் இன்றிலிருந்து ஒரு வாரக் காலத்துக்கு அவர்களின் வீடுகளிற்குச் சென்று இராணுவத்தினரின் உதவியுடன் தடுப்பூசிகளைச் செலுத்தவுள்ளோம்.
மாவட்டத்தில் விடுபட்டுள்ள 7000 பேருக்கும் தடுப்பூசியைச் செலுத்தும் வரை இத்திட்டம் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.







தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

நொருங்கிய கார்.. நிச்சயதார்த்தம் முடிந்த மூன்றே நாளில் விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா Cineulagam

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam
