இயக்கச்சி பகுதியில் இருவர் கைது
வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் இருந்து கஞ்சாவுடன் பயணித்த இருவரை நேற்று (25.09.2024) இயக்கச்சி ஆனையிறவில் வைத்து இராணுவத்தின் உதவியுடன் பளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உடுத்துறை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4.500 கிலோகிராம் கஞ்சாவுடன் கொடுக்குளாய் சுனாமி வெளியேற்ற பாதையூடாக மோட்டார் சைக்கிளில் இரகசியமான முறையில் பயணித்த இருவரையே பொலிஸார் கைது செய்தனர்.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுத்த விசாரணைகளின் பின்னர் கடத்தலில் ஈடுபட்டவர்கள் 18 மற்றும் 25 வயதுடைய கிளிநொச்சியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் சட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பளை பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ் நாள் முழுவதும் ஏற்க தயார்... மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த ஷாக் Manithan
குணசேகரன் பற்றி வெளிவந்த ரகசியம், கடும் ஷாக்கில் பெண்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
பிரித்தானியாவின் மில்லியனர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி - வெளிநாடுகளில் குடியேறும் செல்வந்தர்கள் News Lankasri