தென் ஆசியாவின் மிகப்பெரிய சிறுநீரக வைத்தியசாலை பொலனறுவையில் அங்குரார்ப்பணம்
தென் ஆசியாவின் மிகப் பெரிய சிறுநீரக வைத்தியசாலை பொலனறுவையில் இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச, சீனத் தூதுவர் க்யூ ஸின்ஹொங், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
கடந்த 2015ம் ஆண்டு இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சீனாவிற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த வைத்தியசாலை நிர்மானிக்கப்பட்டது.
ஆயிரத்து இருநூறு கோடி ரூபா செலவில் இந்த வைத்தியசாலையில் நிர்மானிக்கபபட்டுள்ளது.
200 படுக்கைகள், இரத்த சுத்திகரிப்பு செய்யும் 100 படுக்கைகள், ஐந்து சத்திரசிகிச்சை கூடங்கள், அதி நவீன இரண்டு அதி தீவிர சிகிச்சைப் பிரிவுகள் என்பன இந்த வைத்தியசாலையில் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
சீன அரசாங்கத்தின் அனுசரணையில் இந்த வைத்தியசாலை நிர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri