வெளிநாட்டில் பணியாற்றும் தாய் - கொழும்பில் விபத்தில் உயிரிழந்த சிறுமி
பிலியந்தலை - தம்பே பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற விருந்து ஒன்றில் நீச்சல் குளத்தில் விழுந்த 6 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் பலன்வத்தை பிரதேசத்தை சேர்ந்த இஹன்சா நமோதி பெரேரா எனும் சிறுமி என தெரியவந்துள்ளது.
குறித்த சிறுமியின் தாயார் வெளிநாட்டில் பணியாற்றும் நிலையில், அவர் தனது தந்தையின் சகோதரியின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்த சிறுமி
நேற்று முன்தினம் நடைபெற்ற புதுவருடக் கொண்டாட்டத்தில் சுமார் 40 உறவினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மதிய நேரத்தின் பின், சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் நீச்சல் குளத்திற்கு அருகில் இருந்துள்ளனர்.
இதன் போது பெரியவர்களுக்கான ஆழமான பகுதியில் கறுப்பு நிறப் பொருள் ஒன்று கிடப்பதாக சிறுமியின் மாமா ஒருவர் அவதானித்துள்ளார்.
மரண விசாரணை
உடனடியாக அது குறித்து விசாரித்தபோது, அது நீரில் மூழ்கிய நிலையில் இருந்த சிறுமி என்பதை உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

உடனடியாக சிறுமி மீட்கப்பட்டு, முதலுதவி அளிக்கப்பட்டு பிலியந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதே சிறுமி உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
சம்பவம் நடந்த இடத்திற்கு வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரி, சம்பவ இடத்தைப் பார்வையிட்டார்.
பின்னர், சிறுமியின் உடலை உடற்கூற்றுப் பரிசோதனைக்காக களுபோவில போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
மேலதிக விசாரணைகளை பிலியந்தல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 11 மணி நேரம் முன்
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam