தமிழ் மக்களின் சரித்திரத்தில் முக்கிய திருப்புமுனையாகும் கிபுல்ஓயா திட்ட போராட்டம்! எம்.ஏ.சுமந்திரன்

Vavuniya M A Sumanthiran Government Of Sri Lanka
By Thileepan Feb 03, 2026 05:45 AM GMT
Report

கிபுல் ஓயா திட்டத்திற்கு எதிரான போராட்டம் தமிழ் மக்களுடைய சரித்திரத்தில் மிக முக்கியமான திருப்பு முனையான போராட்டமாக அமைந்துள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற கிபுல் ஓயா திட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மகிந்தவோடு FCIDக்கு வந்த ஷிரந்தி ராஜபக்ச சற்று முன்னர் வெளியேறினார்

மகிந்தவோடு FCIDக்கு வந்த ஷிரந்தி ராஜபக்ச சற்று முன்னர் வெளியேறினார்

தமிழ் மக்களுடைய சரித்திரத்தில் முக்கிய திருப்புமுனை

தமிழ் மக்களுடைய சரித்திரத்தில் மிக முக்கியமான ஒரு திருப்பு முனையான போராட்டமாக இது அமைகிறது. ஏனென்றால் பல தசாப்தங்களுக்கு முன்னராகவே தயாரிக்கப்பட்ட இந்த இனப்பரம்பலை மாற்றுகின்ற இந்தத் திட்டம், இப்பொழுது நடைமுறைக்குக் கொண்டு வரப்படுகிறது.

தமிழ் மக்களின் சரித்திரத்தில் முக்கிய திருப்புமுனையாகும் கிபுல்ஓயா திட்ட போராட்டம்! எம்.ஏ.சுமந்திரன் | Kibul Oya Project Protest Sumanthiran Statement

அமைச்சரவை அங்கீகாரம் கடந்த திங்கட்கிழமை கொடுக்கப்பட்டிருக்கிறது. பல தசாப்தங்களுக்கு முன்னர், நீண்ட காலமாக வடக்கிலும் கிழக்கிலும் இனப்பரம்பலை மாற்றுகின்ற திட்டம், அது ஒவ்வொரு திட்டங்களின் மூலமாக அமல்படுத்தப்பட்டிருப்பது எங்களுக்குத் தெரியும்.

கல்லோயா திட்டத்தில் இருந்து விசேடமாக கிழக்கின் இனப்பரம்பல் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. அப்படியாகவே நகர்ந்து வந்து முல்லைத்தீவு மாவட்டம், வவுனியா வடக்கு போன்ற பிரதேசங்களிலும் இனப்பரம்பலை மாற்றுகின்ற திட்டம் நடைமுறையில் இருக்கிறது.

எங்களுக்கு ஏற்கனவே தெரியும் மணலாறு வெலியோயாவாக மாறிவிட்டது. இப்படியாகப் பல இடங்கள் முழுக்க மாற்றப்பட்டிருக்கிறது.

இந்த கிபுல் ஒயா திட்டம் என்பது இந்த பாரியதொரு வேலைத் திட்டத்தினுடைய ஒரு பகுதி. இது கைவிடப்பட்ட திட்டமாக இருந்தாலும் கூட, இப்பொழுது மீண்டும் அதற்கு உயிர்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

அமைச்சரவை அங்கீகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பணம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த வருடத்துக்குப் பணம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. போதிய அளவு பணத்தை இதற்காக அவர்கள் செலவு செய்ய இருக்கிறார்கள்.

சிங்கள குடியேற்ற திட்டம்

தமிழ் பிரதேசம் முழுவதையும் நீருக்குள்ளே அழுத்தி, அதில் இருந்து வருகின்ற நீர்ப்பாசனத்தின் மூலமாக ஏற்கனவே குடியேற்றம் செய்யப்பட்ட சிங்கள பிரதேசங்களுக்கு இந்த நீர்ப்பாசனத் தண்ணீரைக் கொடுப்பதற்கான திட்டம்.

அதிலும் விசேடமாக இந்தத் திட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது, புதிய குடியிருப்பாளர்களையும் கொண்டு வந்து அங்கே அமர்த்துவார்கள் என்று. இப்பொழுது இருக்கிற அந்தப் பிரதேசங்களில் தமிழ் மக்களைக் குடியேற்ற முடியாது.

தமிழ் மக்களின் சரித்திரத்தில் முக்கிய திருப்புமுனையாகும் கிபுல்ஓயா திட்ட போராட்டம்! எம்.ஏ.சுமந்திரன் | Kibul Oya Project Protest Sumanthiran Statement 

ஏனென்றால் அங்கே ஏற்கனவே நூறு வீதமாக சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டிருக்கிறார்கள். எப்படியெப்படியெல்லாம் கொண்டு வந்து குடியேற்றினார்கள் என்று எங்களுக்குத் தெரியும்.

தமிழ் மக்களை இந்த வேளையிலே கொண்டு போய் அங்கே குடியேற்றுவது என்பது முற்று முழுதும் அசாத்தியமான ஒரு விடயம். ஆகையினாலே இந்தத் திட்டத்தை நடைமுறைபடுத்துவது என்பது நீண்ட காலமாக, பல்வேறு அரசாங்கங்கள் மாறி மாறி வந்த போது கொண்டு வரப்பட்ட திட்டத்தின் நீட்சியாகத்தான் இது காணப்படுகிறது.

அரசாங்கத்தின் தெளிவான வாக்குறுதி

இந்த அரசாங்கம் மிகத் தெளிவாக ஒரு வாக்குறுதியைக் கொடுத்திருந்தது. அதாவது இனப்பரம்பலை மாற்றுகிற எந்த அபிவிருத்தித் திட்டத்தையும் நாங்கள் நடைமுறைபடுத்த மாட்டோம் என்பதை எழுத்திலே தெளிவாகச் சொல்லியிருக்கிற இந்த அரசாங்கம் தான் இப்பொழுது அதற்கு உத்தியோகபூர்வ அனுமதியைக் கொடுத்து அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த இருக்கிறார்கள்.

ஆகவே,  தான் இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு. ஒன்றாகச் சேர்ந்து தமிழ் மக்கள் அனைவரும் எந்தவித கட்சி பேதமும் இல்லாமல், கட்சிகளைச் சேராதவர்களும் அரசியலிலே இல்லாதவர்களும் அனைவருமாகச் சேர்ந்து வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் எங்களுடைய பூர்வீகத்தைப் பாதுகாக்கிற இந்த நிகழ்ச்சியிலே இன்றைக்கு ஒன்று சேர்ந்திருக்கிறோம்.

இந்தச் செய்தியை தான் நாங்கள் இப்பொழுது அரசாங்கத்திற்கு எழுத்து மூலமாக அறிவிக்க இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

சி.ஐ.டியிலிருந்து நாமல் ராஜபக்ச வெளியேறினார்

சி.ஐ.டியிலிருந்து நாமல் ராஜபக்ச வெளியேறினார்

 

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் சரிவு! இலங்கையிலும் மாற்றம் - வெளியான பின்னணி

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் சரிவு! இலங்கையிலும் மாற்றம் - வெளியான பின்னணி



மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US