தமிழர் தரப்பு நிலைப்பாடுகளை அறிவதற்காக ஐ.நா முக்கியஸ்தர் மேற்கொண்ட சந்திப்பு (PHOTO)
தமிழர் தரப்பு நிலைப்பாடுகளை அறிவதற்காக ஐ.நாவின் அரசியல் மற்றும் சமாதானத்திற்கான உதவிச் செயலாளர் காலிட் கிஹாரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நேற்று முன் தினம் இலங்கைக்கு வருகை தந்த காலிட் கிஹாரி (Khalid Kihari) இந்த கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.
குறித்த சந்திப்பு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) மற்றும் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோருடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, இலங்கையில் தொடரும் அடக்குமுறைகள் மற்றும்
ஆக்கிரமிப்புகள் ஊடான இன அழிப்பு குறித்தும், தமிழர் பொறுப்புக்கூறல் தேவைப்பாடுகள்
குறித்தும், தமிழரின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam