பிரான்ஸில் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் முக்கிய கட்டுப்பாடு-உலக செய்திகள்
பிரான்ஸில் மீண்டும் கோவிட் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளமையினால் முகக்கவசம் அணிவதை நடைமுறைப்படுத்தவதற்கு திட்டமிடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸில் கோவிட் தொற்றின் 8ஆவது அலை ஏற்படுவதனை தவிர்ப்பதற்காக பொது இடங்களில் முகக்கவசம் அணிவதனை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதனை கட்டாய சட்டமாக நடைமுறைப்படுத்துவதா என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்ற போதிலும், காய்ச்சல் மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் FFP2 முகக்கவசம் அணியுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சுகாதார நிலைமைக்கு தற்போது கட்டாய நடவடிக்கைகளுக்குத் திரும்ப வேண்டிய அவசியமில்லை என்றாலும், மக்களால் முடிந்த சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய மருத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மூடிய இடங்களுக்கும்,பொது இடங்களுக்கும் செல்லும் வயதானோர் மற்றும் நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் முடிந்த அளவு முகக் கவசத்துடன் சென்றால் பாதிப்புகளை தவிர்க்க முடியும் என தேசிய மருத்துவ நிறுவனத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
குளிர்காலத்தில் கோவிட் தொற்றின் அதிக பாதிப்பு மற்றும் குளிர்கால பருவ காய்ச்சலின் தாக்கம் அதிகளவில் காணப்படும்.
இதனால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்து சுகாதார கட்டமைப்பிற்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.




