இலங்கை கிரிக்கட் தொழில்நுட்ப மற்றும் ஆலோசனை குழுவிலிருந்து முக்கிய வீரர் விலகல்
இலங்கை கிரிக்கட் தொழில்நுட்ப மற்றும் ஆலோசனைக் குழுவிலிருந்து முன்னாள் நட்சத்திர வீரர் ரொசான் மஹானாம பதவி விலகியுள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முத்தையா முரளீதரன், குமார் சங்கக்கார, அரவிந்த டி சில்வா மற்றும் ரொசான் மஹானாம ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தக் குழுவிலிருந்து விலகுவதாக ரொசான் மஹானாம எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா கிரிக்கட்டுடன் இணைந்து செயற்பட முடியாது என்ற காரணத்தினால் தாம் ராஜினாமா செய்வதாக எவரும் பிழையாக விளங்கிக்கொள்ள கூடாது எனவும், தாம் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாகவும் ரொசான் மஹானாம தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தம்பதியாய் வந்த ஜேர்மன் பெண் - இந்திய இளைஞருக்கு சோதனை! உயிரை காப்பாற்றி கொள்ள ஓடிய பரிதாபம்.. வீடியோ News Lankasri
