அன்ரன் பாலசிங்கத்தை விடுதலைப்புலிகளிற்கு அறிமுகப்படுத்திய முக்கியஸ்தர்
1979 ஆம் ஆண்டு கால கட்டத்தில் தமிழ் இளைஞர்கள் அணியில் சேர்ந்து விடுதலை போராட்டத்தில் ஈடுபடுவதற்கான பேச்சு வார்த்தையின் அடிப்படையிலேயே அண்ரன் பாலசிங்கம் இந்தியாவிற்கு சென்றதாக அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் மூத்த சட்டத்தரணி செல்லத்துரை ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இதன்போது அங்கு தமிழ் இளைஞர்களுக்கிடையில் பிளவுகள் ஏற்பட்டதன் பின்னரே அவர் அப்போதைய சூழ்நிலையில் தமிழீழ விடுதலை புலிகளின் ஆலோசகராக செயற்பட்டுள்ளார்.
அவர் சென்னைக்கு சென்று தமிழ் இளைஞர்களுக்கிடையில் பிளவுகள் ஏற்பட்ட போது பிரபாகரன் தமிழீழ விடுதலை புலிகளாகவும்,உமா மகேஸ்வரன் புளொட் என்றும் அவர் போய் சென்ற இடம் விடுதலை புலிகளின் ஆதரவு இடமாக இருந்த படியால் அவர் அவர்களோடு நெருங்கி பழகி ஆலோசகராக செயற்பட்டுள்ளார்.
இருப்பினும் 1987 ம் ஆண்டுக்கு பின்னர் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட பின்பு என்னோடு தொடர்பில் இல்லை.மூன்றாம் தரப்பு பேச்சு வார்த்தைகளே இடம்பெற்றது.
இந்த சூழ்நிலையில்,நோர்வே பேச்சு வார்த்தையின் பின்னர் அவர் லண்டனுக்கு வருகை தந்து என்னோடு பேச முயற்சித்தார்.ஆனால் நேரடியாக அவரோடு பேசக்கூடிய வாய்ப்பு கிட்டவில்லை.
இருப்பினும் அவர் பேச வந்த விடயம் தொடர்பில் மூன்றாம் தரப்பின் மூலம் அறிந்துக்கொண்டேன்.அவற்றையெல்லாம் தற்போது பகிர்ந்துக்கொள்ளும் அவா இல்லையென்றும் தெரிவித்துள்ளார்.