விடுதலைப் புலிகளின் தாக்குதலை விட பயங்கரமான விடயம்! கொழும்பில் பகிரங்க எச்சரிக்கை
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மத்திய வங்கி மீது மேற்கொண்ட தாக்குதலை விட தற்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச புதிய மத்திய வங்கி சட்டமூலம் பாரதூரமானது என நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க எச்சரித்துள்ளார்.
அத்துடன் மத்திய வங்கியின் ஆளுநரை நிதியமைச்சர் நியமிப்பது எவ்வாறு சுயாதீனமாக அமையும் என அவர் வினவியுள்ளார்.
இதேவேளை, அரசியல் நோக்கத்தை முன்னிலைப்படுத்தி சட்டங்கள் இயற்றப்பட்டால் அது பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளாார்.
கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை பகிரங்கப்படுத்தியுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,