ஒலிம்பிக் போட்டியில் கால்பதிக்க தயாராகும் சாதனை வீராங்கனை!
குறுந்தூர ஓட்ட போட்டிகளில் சாதனை வீராங்கனையாக கருதப்படும் அமெரிக்காவின் ஷா கெரி ரிச்சர்ட்சன் இந்த பருவகாலத்துக்கான பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியின் அதிசிறந்த நேரப்பிரதியை பதிவு செய்துள்ளார்.
100 ஓட்டப் போட்டியில் 10.71 செக்கன்களில் நிறைவு செய்து தங்கப்பதக்கம் வென்றதுடன், 2024 பரிஸ் ஒலிம்பிக்குக்கான தகுதியையும் பெற்றுக்கொண்டார்.
தடகள உலகின் முழு பார்வையையும் தன்னகத்தே கொண்டுள்ள கெரி ரிச்சர்ட்சன் 2023இல் ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட்டில் நடைபெற்ற உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பின் பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தார்.
முதலாவது ஒலிம்பிக்
ஷா கெரி ரிச்சர்ட்சனுக்கு இது முதலாவது ஒலிம்பிக் தொடராகும். இந்த வெற்றி குறித்து ஷா கெரி ரிச்சர்ட்சன் கூறுகையில், "என் வாழ்க்கையில் நான் கடந்து வந்த ஒவ்வொரு அத்தியாயமும் இந்த தருணத்துக்காக என்னை வடிவமைத்து தயார்ப்படுத்துவதற்காக ஆகும்.

பரிஸ் சென்று தாய்நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் அந்த நொடிக்காக காத்திருக்கின்றேன்.
கடந்த மூன்று ஆண்டுகளில் நான் முன்னேற்றம் அடைந்துள்ளேன். என்னை நம்பி என்னை ஆதரிக்கும் மக்கள் மீதுள்ள எனக்கான பொறுப்பு அதிகமாகியுள்ளது" என கூறியுள்ளார்.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam