மண்ணெண்ணை அடுப்பு கவிழ்ந்து கர்ப்பிணி பெண் ஒருவர் பலி
மண்ணெண்ணை அடுப்பு கவிழ்ந்து கர்ப்பிணி தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தனது வீட்டில் காணப்படும் எரிவாயு அடுப்பினை பயன்படுத்துவதற்கு அஞ்சி குறித்த பெண் மண்ணெண்ணை அடுப்பில் உணவு சமைத்துக் கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உணவு சமைத்துக் கொண்டிருந்த போது அடுப்பு கவிழ்ந்து உடலில் தீப்பற்றிக் கொண்டதனால் குறித்த கர்ப்பிணிப்பெண் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பெண், கடந்த 31ம் திகதி இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளார். விபத்திற்கு உள்ளாகிய பெண் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உடலில் தீப்பற்றிக்கொண்டதனால் உடல் உறுப்புக்களில் ஏற்பட்ட பலத்த காயங்களினால் இந்த கர்ப்பிணி பெண் உயிரிழந்தார் என பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
