புதுக்குடியிருப்பில் குளிர்பானம் கொள்வனவு செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
முல்லைதீவு- புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியிலுள்ள விற்பனை நிலையம் ஒன்றில் நபர் ஒருவர் குளிர்பானமொன்றை கொள்வனவு செய்த போது அதற்குள் மண்ணெண்ணை மணம் இருப்பதாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது இன்றையதினம்(27) இடம்பெற்றுள்ளது.
மண்ணெண்ணை மணம்
முல்லைத்தீவு பதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் இருந்து நபர் ஒருவர் வீட்டு வேலையாட்களுக்காக குளிர்பானங்களை கொள்வனவு செய்துள்ளார்.

குளிர்பானத்தினை கொள்வனவு செய்த குறித்த நபரின் வீட்டு வேலையாட்கள் அதனை குடித்தபோது குளிர்பானத்தில் இருந்து மண்ணெண்ணை மணம் வந்துள்ளது.
அதனையடுத்து புதுக்குடியிருப்பு பிராந்திய சுகாதார சேவை பணிமனைக்கு குறித்த நபர் குளிர்பானத்துடன் நேரில் சென்று குறித்த சம்பவம் தாெடர்பாக முறைப்பாடு வழங்கியியுள்ளார்.
வழக்கு தாக்கல்
அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த புதுக்குடியிருப்பு பிராந்திய சுகாதார சேவை பணிமனை பரிசோதகர்கள் குறித்த விற்பனை நிலையத்தினை சோதனை செய்து கலப்படம் இருப்பதாக சந்தேகிக்கப்படும் குளிர்பானத்தினை கைப்பற்றியுள்ளனர்.

மண்ணெண்ணை கலக்கப்பட்டு இருக்கின்றது என சந்தேகிக்கப்படும் குளிர்பானத்தின் மாதிரியை பரிசோதனைக்கு அனுப்பப்படவுள்ளது.
அத்தோடு குறித்த குளிர்பானத்தினை விற்பனை செய்த விற்பனையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதனையடுத்து அதே பகுதியில் உள்ள ஏனைய விற்பனை நிலையங்களிலும் சுகாதார பரிசோதகர்களால் சோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri