மண்ணெண்ணெய் கொள்வனவு இரண்டு மடங்காக அதிகாித்துள்ளது : உதய கம்மன்பில
மண்ணெண்ணெய்க்கான கேள்வி இரண்டு மடங்காக அதிகாித்துள்ளது என்று எாிசக்தித்துறை அமைச்சா் உதய கம்மன்பில தெரிவித்துள்ளாா்.
நாளாந்தம், 550 மெற்றிக் தொன் மண்ணெண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக அவா் செய்தியாளா் சந்திப்பு ஒன்றின்போது குறிப்பிட்டுள்ளாா்.
தொழிற்சாலைகளின் இயந்திரங்கள், படகுகள் மற்றும் பேருந்துகளுக்கும் டீசலைக்காட்டிலும் இலாபமானது என்ற வகையில் மண்ணெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.
நாட்டில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு மாற்றாக மண்ணெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.
அத்துடன் இலங்கை மின்சார சபையின் பணியாளா்கள் பணிப்புறக்கணிப்புக்கு செல்லலாம் என்று சந்தேகமும் மண்ணெண்ணெய்யின் அதிக கொள்வனவுகளுக்கான காரணம் என்று கம்மன்பில குறிப்பிட்டுள்ளாா்.
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan
ஈரானுக்கு எதிராக அதிநவீன லேசர் தொழில்நுட்பம்: மாற்று திட்டத்தை கையில் எடுத்த அமெரிக்கா News Lankasri