மாணவ மாணவிகளுக்கு இடையில் “பாலின சமத்துவத்துவம்” கேரள பாடசாலையின் முன்மாதிரி
பாலின சமத்துவத்தை பேணும் முகமாக இந்தியாவின் கேரளாவில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் “ஒரே சீருடை“ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கேரளாவில் அண்மைக்காலமாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் பாலின சமத்துவத்துக்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன் ஒரு கட்டமாகவே கேரளாவின் அரச பாடசாலை ஒன்றில் பாலின பாகுபாடற்ற சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கோழிக்கோடு மாவட்டத்தின் பாலுச்சேரியில் அமைந்துள்ள அரச பாடசாலையில் கடந்த புதன்கிழமையன்று பதினொன்றாம் வகுப்பில் பயிலும் 200 மாணவிகள் ஆண்களை போல மேல் சட்டையும், நீள் காற்சட்டையும் அணிந்து பாடசாலைக்கு வருகை தந்தனர்.
இந்த சீருடை மாற்றம் மாணவிகளுக்கு சௌகரியத்தை வழங்குவதுடன் விளையாட்டுகள் மற்றும் இதர போட்டிகளில் கலந்து கொள்ள வசதியளிப்பதாக பாடசாலையின் நிர்வாகம் தெரிவிததுள்ளது.
