இலங்கை கடற்படையின் விசேட நடவடிக்கை! கேரள கஞ்சாவுடன் 10 பேர் கைது (PHOTOS)
இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக படகு மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சுமார் 130 மில்லியன் ரூபா பெறுமதியான 434 கிலோ கேரளா கஞ்சாவுடன் 05 இந்தியர்களும் 05 இலங்கையர்களும் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் 10 பேரும் கற்பிட்டிக்கடலில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையின் தீவிர நடவடிக்கை
தமிழகத்தின் தூத்துக்குடியில் இருந்து கடத்தி வரப்பட்ட கேரள கஞ்சாவைக் கற்பிட்டியில் இறக்கிவிட்டுத் தப்பிச் செல்லும் நோக்கில் உட்புகுந்த தூத்துக்குடியைச் சேர்ந்த ஐவர் இலங்கைப் படகில் கேரள கஞ்சாவை மாற்ற முற்பட்டபோது இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது இந்தக் கேரள கஞ்சாவைக் கரைக்குக் கொண்டு வர முயன்ற இலங்கை மீனவர்கள் ஐவரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேக நபர்கள் சான்றுப் பொருட்களுடன் கற்பிட்டிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
