களனி துப்பாக்கிச்சூடு குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்
களனியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் மூவர் காயமடைந்துள்ளனர்.
களனி திப்பிட்டிகொட பகுதியில் நேற்று (25) மாலை துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திப்பிட்டிகொட ஆரம்ப பாடசாலைக்கு அருகில் வீதியொன்றில் பயணித்த குழுவினர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் 3 பேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெளியான காரணம்
T56 துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், 30 க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் சுடப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர்கள் "திப்பிட்டிகொட லஹிரு" என்ற குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் விசாரணையில் தற்போது தெரியவந்துள்ளது.
இரு தரப்பினருக்கும் இடையில் நிலவி வரும் தகராறு காரணமாகவே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 10 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri