கெஹலிய குடும்பத்தினரின் சொத்துக்கள் முடக்கம் குறித்து உயர் நீதிமன்றின் தீர்ப்பு
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்லவின் குடும்பத்தினரின் சொத்துக்களை முடக்குவது குறித்த நீதிமன்ற தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் உயர் நீதிமன்றினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் ரம்புக்வெல்லவின் குடும்பத்தினருக்குச் சொந்தமான சொத்துகளை முடக்குமாறு கொழும்பு உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை செல்லாது செய்வதற்காக தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்கள் உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளன.
உயர் நீதிமன்ற குழாம்
இந்த மனுக்கள் கெஹெலிய ரம்புக்வெல்லவின் குடும்பத்தினர் சார்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

நீதியரசர்களான ஜனக் டி சில்வா தலைமையிலான மூன்று நீதியரசர்களைக் கொண்ட உயர் நீதிமன்ற குழாம் மனுக்களை பரிசீலனை செய்ததன் பின், இந்த உத்தரவை வெளியிட்டது.
இதனால், கொழும்பு உயர்நீதிமன்றம் வழங்கிய சொத்து முடக்க உத்தரவு தற்போது தொடர்ச்சியாக நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |