சீனாவின் குப்பைகள் இலங்கையில் கொட்டுவதற்கு இடமளிக்கப்படாது - அரசாங்கம்
சீனாவின் குப்பைகள் இலங்கையில் கொட்டுவதற்கு இடமளிக்கப்படாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.
சீனாவின் கழிவுகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு இங்கு கொட்டப்பட உள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மையா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
சீனாவிலிருந்து குப்பைகளை இலங்கை இறக்குமதி செய்வதாக வெளியாகும் தகவல் நகைப்பிற்குரியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சில ஊடக நிறுவனங்கள் திட்டமிட்ட வகையில் அரசாங்கத்திற்கு களங்கம் கற்பிக்கும் வகையில் வதந்திகளை பரப்பி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
சீனாவிலிருந்து குப்பைகளை ஸ்ரீலங்கா இறக்குமதி செய்வதாக வெளியாகும் தகவல் நகைப்பிற்குரியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சில ஊடக நிறுவனங்கள் திட்டமிட்ட வகையில் அரசாங்கத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வதந்திகளை பரப்பி வருவதாகக் குற்றம் சுமத்தினார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளான எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலிலிருந்து வெளியாகி இரசாயன பதார்த்தங்களால் உப்பு உற்பத்திக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப்பேவது இல்லையென அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும்.
ஸ்ரீலங்கா அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார். எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலிலிருந்து இரசாயனங்கள் வெளியாகியுள்ளமையால் உப்பு உற்பத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும், அவ்வாறு உப்பு உற்பத்திக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
உப்பு உற்பத்தி செய்யப்படும் கடற் பிரதேசங்களில் குறித்த கப்பலிலிருந்து
வெளியாகிய இரசாயனங்கள் கலக்கவில்லை எனவும், எனவே உப்பு உற்பத்தி
பாதிக்கப்படமாட்டாது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.