கெஹல்பத்தரவுடன் நடிகைகளின் தொடர்பு - விசாரணையில் அம்பலமான உண்மைகள்
குற்றச்செயல் கும்பலின் தலைவன் மன்தினு பத்மசிறி எனப்படும் கெஹல்பத்தர பத்மே கருப்பு பணத்தை வெள்ளையாக்க பிரபல நடிகைகளை பயன்படுத்தியமை குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குறித்த நடிகைகளுக்கு கெஹல்பத்தர பத்மே பெருந்தொகை பணம் கொடுத்தாரா என்பது குறித்து ஆராயப்பட்டு வருகின்றது.
கறுப்பு பணத்தை பல்வேறு முதலீடுகளில் குறித்த நடிகைகள் பயன்படுத்தியதாக வெளியான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஐந்து பேரிடம் வாக்குமூலம்
மேலும், டுபாயில் கெஹல்பத்தர பத்மேவுடன் புகைப்படம் எடுத்த பியூமி ஹன்சமாலி மற்றும் ஸ்ரீமாலி பொன்சேகா உட்பட ஆறு பிரபல நடிகைகளில் ஐந்து பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வாக்குமூலம் அளிக்க குற்றப் புலான்ய்வு திணைக்களத்திற்கு வந்த நடிகை ஸ்ரீமாலி பொன்சேகா, தான் கெஹல்பத்தர பத்மே என்பதை அறியாமல் புகைப்படம் எடுத்ததாக குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் இந்தோனேஷியாவில் பதுங்கியிருந்த நிலையில், கெஹல்பத்தர பத்மே தலைமையிலான குற்றக்கும்பல் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.
பல்வேறு ரகசியங்கள்
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில் பல்வேறு ரகசியங்கள் வெளியாகி வருகின்றன.

இதனை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு தரப்பினர் கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |