கெஹல்பத்தர பத்மே உட்பட ஐந்து சந்தேக நபர்களுக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல்
இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சாலிந்தா உள்ளிட்ட ஐந்து நபர்களை 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸார் தடுப்புக்காவல் உத்தரவுகளைப் பெற்றுள்ளனர்.
குறித்த ஐவரையும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் 72 மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
தீவிர விசாரணை
இதன்போது அம்பலமாகிய தகவல்கள் தொடர்பில் தீவிர விசாரணையில் பொலிஸார் இறங்கியுள்ளனர்.
மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவின் பொலிஸ் காவலில் உள்ள தம்பிலி லஹிரு மற்றும் பேக்கோ சமன் ஆகியோரின் விசாரணையில் பல விவரங்கள் வெளிவந்ததாக முன்னதாக கூறப்பட்டது.
இதற்கிடையில், கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சாலிந்த மற்றும் பாணந்துறை நிலங்கா ஆகியோர் குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இலங்கை பொலிஸார், இந்தோனேசிய பொலிஸார் மற்றும் இன்டர்போல் நடத்திய கூட்டு நடவடிக்கையில் கடந்த வியாழக்கிழமை இந்தோனேசியாவில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.



