கெஹெலிய ரம்புக்வெல்லவின் மனு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல(Keheliya Rambukwella) தாக்கல் செய்த ரிட் மனு தொடர்பான உத்தரவை மே 07 ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தன்னை வழக்கு விசாரணை முடியும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இரத்துச் செய்து ஆணை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவால் ரிட் மனுவை பரிசீலிக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு உத்தரவு
இதற்கான உத்தரவு இன்று (30) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், அது குறித்த உத்தரவு மே 07ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக மேன்முறையீட்டு நீதிபதி டி.என். சமரகோன் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |