கெஹலியவின் விளக்கமறியல் நீடிப்பு!
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களுக்கும் விளக்கமறியல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை குறித்த சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்துகளை இறக்குமதி செய்ததாக கூறப்படும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
விளக்கமறியல் நீடிப்பு
தரமற்ற தடுப்பூசி சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பெப்ரவரி 2ஆம் திகதி கைது செய்யப்பட்டதுடன், சந்தேகநபர் மறுநாள் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
அதன்படி, தற்போது வரை முன்னாள் சுகாதார அமைச்சர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan

Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam

ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri
