வவுனியாவில் அதிக விலைக்கு விற்கப்படும் அரலிய கீரிச்சம்பா: நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்!
வவுனியாவில் அரலிய கீரிச்சம்பா அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதுடன், அது தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வாடிக்கையாளர் ஒருவர் கடைக்கு சென்று அரலிய கீரிச்சம்பா கேட்கின்ற போது களஞ்சிய அறையில் இருந்தே அதனை எடுத்து வழங்கி வருகிறார்கள்.
தெரிந்த முகங்களுக்கு மாத்திரமே விற்பனை செய்யப்படுகின்றது. தெரியாத முகங்கள் என்றால் கொஞ்ச நேரம் நிற்க சொல்கிறார்கள். வாங்கிய பின் பற்றுச்சீட்டும் உரிய விலைபோட்டு பற்றுச் சீட்டு வழங்க மறுக்கிறார்கள்.
நடவடிக்கை
5 கிலோவிற்கான விற்பனை விலை 1300 ரூபாய் என்று பையில் குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் 1900 ரூபாய்க்கு நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

அப்படியானால் 260 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட வேண்டிய ஒரு கிலோ அரிசி 380 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது.
விலைபற்றி கேட்டால் நாட்டரிசி வாங்கி உண்ணுங்கள் என்று நகைச்சுவையாக கூறுகிறார்கள். யார் நடவடிக்கை எடுப்பது என பாவனையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 மணி நேரம் முன்
ஒரே ட்யூனில் உருவான 2 பாடல்கள்.. இரண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட்! மேஜிக் செய்த இசையமைப்பாளர் இளையராஜா.. Cineulagam