இலங்கையின் நிலைமைகளை கூர்ந்து கவனித்து வருகிறோம்:சீனா
இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் சீன கூர்ந்து கவனித்து வருகிறது என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வேங்க் வேன்பின்( Wang Wenbin) தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சகவ துறைகள், நாடு மற்றும் நாட்டு மக்களின் அடிப்படை தேவைகளுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவார்கள் என நம்புகிறோம்
இதனை தவிர சமூக ஸ்திரத்தன்மை, பொருளாதார முன்னேற்றம், வாழ்வாதார முன்னேற்றம் என்பவற்றை துரிதமாக அடைய இலங்கையர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவார்கள் என நம்புகின்றோம் எனவும் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கூறியுள்ளார்.
வழமையான செய்தியாளர் சந்திப்பொன்றில், இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே வேங்க் வேன்பின் இதனை கூறியுள்ளார்.
சீனா இலங்கையில் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்களில் முதலீடுகளை செய்துள்ளதுடன் இலங்கைக்கு பெருந்தொகையான நிதியை கடனாக வழங்கியுள்ளது.
இதனால், இலங்கையில் ஏற்படும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளை தொடர்பில் சீனா கூடிய கவனம் செலுத்தி வருகிறது.