கஜகஸ்தானில் இடைக்கால தேர்தல்! ஜனாதிபதியின் உத்தரவு
மத்திய ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதார நாடான கஜகஸ்தானில், புதிய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து, வரும் ஒகஸ்ட் 23ஆம் திகதி இடைக்கால நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என அந்த நாட்டு ஜனாதிபதி காசிம்ஜோமார்ட் டோகாயெவ் நேற்று(01.07.2026) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதற்கான அவசரத் திருத்த ஆணையில் அவர் கையெழுத்திட்டுள்ளார். இந்த புதிய அரசியலமைப்பின்படி, கஜகஸ்தானில் இதுவரை நடைமுறையில் இருந்த இரு அவைகளைக் கொண்ட நாடாளுமன்ற முறை மாற்றப்பட்டு, சிறிய அளவிலான ஒற்றை அவை நாடாளுமன்றமாக மாற்றியமைக்கப்படுகிறது.
துணை ஜனாதிபதி பதவி
மேலும், நாட்டில் புதிதாக துணை ஜனாதிபதி என்ற உயரிய பதவியும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் பதவிக்கான நபர் இந்தத் தேர்தல் முடிந்தவுடன் நிரப்பப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2019-ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பொறுப்பேற்ற டோகாயெவ், கஜகஸ்தானின் நிறுவன அதிபரான நூர்சுல்தான் நாசர்பாயேவின் ஆதரவோடு ஆட்சிக்கு வந்தவர் ஆவார்.
ஆனால், 2022-ல் நாட்டில் ஏற்பட்ட வன்முறைப் போராட்டங்களைத் தொடர்ந்து நாசர்பாயேவின் ஆதரவாளர்களுடன் பிளவு ஏற்பட்டுள்ளது.
நாட்டின் அதிகார அமைப்பு
அதன் பின்னர் நாசர்பாயேவின் 30 ஆண்டுகால ஆட்சியை ஊழல் மலிந்த காலம் என்று விமர்சித்து வந்த டோகாயெவ், அவரது அரசியல் செல்வாக்கை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக, நாசர்பாயேவ் தொடங்கிய ஆளும் 'அமானத்' கட்சியானது கடந்த மாதம் டோகாயெவின் நெருங்கிய கூட்டாளிகளால் வழிநடத்தப்படும் புதிய 'அடிலெட்' கட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், நாட்டின் அதிகார அமைப்பைத் தனது முழுக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் ஜனாதிபதி டோகாயெவ் இந்த அதிரடித் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தாந்தாமலை முருகன் ஆலய வரலாற்றை சீர்குலைக்கும் சில தமிழ் அரசியல்வாதிகள் - கொக்கட்டிச்சோலை தவிசாளர் கடும் சீற்றம்
உக்ரைனுக்கு இன்னொரு பேரிடி... புடினுடன் இரகசிய ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த ட்ரம்ப் News Lankasri
வெடிபொருட்கள் இல்லை... RAF ஃபேர்ஃபோர்டுக்கு அருகில் மூன்று வாகனங்கள் தொடர்பில் பொலிசார் News Lankasri
பிக்பாஸ் 10ல் குமரன் ரூ. 5 லட்சம் எடுத்துக்கொண்டு வெளியே வந்ததற்கான காரணம் என்ன தெரியுமா? Cineulagam