நெருக்குதலுக்குள்ளாகும் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்கள்
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயங்களில் கடந்த மூன்று மாதங்களாக ட்ரம்பின் வரி விதிப்பு தொழிலாளர்கள் மீது பல நெருக்குதல்களை ஏற்படுத்தியுள்ளதாக சுதந்திர வர்த்தக வலயங்களில் (EPZ) செயல்படும் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
வரி விதிக்கப்படுவதற்கு முன்பு பெற்ற பெறுகைகளை முடிக்க தொழிற்சாலைகள் தொழிலாளர்கள் மீது பெரும் சுமையை சுமத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
சில நிறுவனங்களின் இரண்டு மணி நேர மேலதிக வேலை நேரம், நான்கு மணி நேரமாக்கப்பட்டுள்ளது.
நெருக்கடி
அத்தோடு 90 நாட்களுக்குள் பொருட்களை அனுப்புமாறு தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலுவையில் உள்ள பெறுகைகளுக்கும் தொழிலாளர்களிடமிருந்து அதிக வேலைகளை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
கடந்த காலங்களில் சுதந்திர வர்த்தக வலயங்களில் தொழிலாளர்களிடமிருந்து வேலை வரம்பற்ற முறையில் பறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 5 மணி நேரம் முன்

பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
