கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானங்கள் தொடர்பில் வெளியான தகவல்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்கும் கட்டணத்தை ஒரு வருடத்திற்கு 50 வீதத்தால் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த முடிவு விமான நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மத்தள விமான நிலையத்திற்கு அதிகளவு விமானங்களை வரவழைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கமைவாக முதல் நான்கு வருடங்களில் விமான சேவை நிறுவனங்களுக்கு பல சலுகைகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
முதல் ஆண்டில் 100 சதவீதமும், இரண்டாம் ஆண்டில் 50 சதவீதமும் கட்டணத்தை தள்ளுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
இது தொடர்பான அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.
தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
உக்கிரமடையும் ஈரான் போர்... இக்கட்டான நேரத்தில் கைவிரித்த ரஷ்யா: இந்தியாவிற்கு புது சிக்கல் News Lankasri