அமெரிக்கா, இங்கிலாந்து, கனடாவில் இருந்து இலங்கை வந்த ஆபத்தான பொதி
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 8 கோடி 50 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
விமான நிலையத்தில் உள்ள விமான சரக்கு களஞ்சியசாலையில் உரிமையாளர்கள் முன்வராத 07 விமான அஞ்சல் பொதிகள் திறக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டன.
சட்டவிரோத போதைப்பொருள்
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கையின் பல்வேறு பகுதிகளில் உள்ள போலி முகவரிகளுக்கு அனுப்பப்பட்ட சட்டவிரோத போதைப்பொருள் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களாக இந்த பார்சல்களை பெற உரிமையாளர்கள் வராததால், அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிகளை ஆய்வு செய்த போது, அவை போலி முகவரிகள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 07 கிலோ 21 கிராம் ஐஸ் போதைப்பொருள், 01 கிலோ 143 கிராம் குஷ் போதைப்பொருள் மற்றும் 01 கிலோ 338 கிராம் மண்டி என்ற இரசாயன போதைப்பொருள் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மரண தண்டனை
மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் போதைப்பொருள் ஆபத்தானவை என அரசாங்கம் அறிவித்துள்ளதுடன், அவற்றினை விற்பனை செய்யும் முகவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டமும் கடுமையாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam