கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை தங்கத்துடன் சிக்கிய பெண்
இந்தியாவில் இருந்து வந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு 2 கோடி 33 லட்சம் ரூபாய் பெறுமதியான வெள்ளி ஆபரணங்கள் மற்றும் தங்க நகைகளுடன் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலையத்தில் பெண் கைது
கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் வசிக்கும் 38 வயதுடைய வர்த்தக பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியன் விமான சேவைக்கு சொந்தமான AI-273 விமானத்தில் சென்னையில் இருந்து இன்று அதிகாலை 02.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
பெருந்தொகை தங்கம்
அவரது பயணப் பையில் இருந்த 01 கிலோ 638 கிராம் எடையுள்ள தங்க நகைகளும், 01 கிலோ 600 கிராம் எடையுள்ள வெள்ளி நகைகளும் இருந்ததை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்து கைது செய்தனர்.
இந்த ஆபரணங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய சுங்க அதிகாரியினால் உத்தரவிடப்பட்டதுடன், அவருக்கு 30000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.