வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றவர் கைது
டுபாய் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற ஓய்வுபெற்ற பெண் விமானப்படை சிப்பாய் ஒருவர் T-56 துப்பாக்கி தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலையத்தின் புறப்படும் மையத்தில் கை பையை ஸ்கேனிங் இயந்திரங்கள் மூலம் சோதனை செய்த போது விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து தோட்டாக்களை குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விசாரணையில் வெளியான தகவல்
குருநாகல், நிகடலுபொத்த, ஹிரிபிட்டியவில் வசிக்கும் 37 வயதுடைய ஓய்வுபெற்ற விமானப்படை சிப்பாய் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தோட்டா தமக்குச் சொந்தமானவை அல்ல என விசாரணைகளின் போது அவர் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri