அபுதாபியிலிருந்து வந்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
அபுதாபியிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் இருவர் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளினால் இன்று ஞாயிற்றுக்கிழமை (06) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெஹியோவிட்ட பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய பெண் மற்றும் பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய ஆண் என இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 24,200 சிகரெட்டுகளும் (121 கார்டூன்கள்) மற்றைய நபரிடமிருந்து 24,600 சிகரெட்டுகளும் (123 கார்டூன்கள்) பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan
