முல்லைத்தீவு காட்டுவிநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வு
முல்லைத்தீவு மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற்றுள்ளது.
கடந்த 14ஆம் திகதி கர்மாரம்ப கிரியைகளுடன் ஆரம்பமான நிலையில் நேற்றைய தினம் 20.03.2024 கும்பாபிஷேகம் சிறப்புற இடம்பெற்றுள்ளது.
கும்பாபிஷேக நிகழ்வு
மூலாலய பிரதிஷ்டா பிரதம குருவாக ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ கா.இரகுநாதக்குருக்கள் தலைமையில் வடக்கில் உள்ள பல முதன்மை குருமார்களின் பங்குபற்றலுடன் ஆலய கிரியை நிகழ்வுகள் நிறைவுபெற்றுள்ளது.
கும்பாபிஷேக நாளான நேற்று (20) வானில் இருந்து ரோன் மூலம் ஆலய கோபுரங்களுக்கு பூ தூவ பக்த அடியவர்களின் அரோகரா ஓசையுடன் கும்பாபிஷேகம் இனிதே நடைபெற்றுள்ளது.
மேலும் தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேக பூர்த்தி நாளான 48 ஆவது நாள் 1008 சங்குகளால் சங்காபிஷேகம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.