பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட ஐவருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government Law and Order
By Dhushi Nov 09, 2026 11:21 AM GMT
Report

அனுராதபுர புனித நகர மேம்பாட்டுத் திட்டத்திற்கு எதிராக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும், பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட ஐந்து பௌத்த பிக்குகளுக்கு, அனுராதபுர முதன்மை நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது.

அனுராதபுர முதன்மை நீதவான் சியாபத் சசிந்து விக்ரமரத்ன, குறித்த ஐந்து பிக்குகளையும் நவம்பர் 20ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு இன்று(09.11.2026) உத்தரவிடப்பட்டுள்ளது.

பலாங்கொட கஸ்ஸப தேரர், கஹதாகஸ்திகிலியே விஜித்த தேரர், பலாங்கொட அனுருத்த தேரர், பிலிமதலாவே ரேவத தேரர் மற்றும் தெனியாயே சொரத தேரர் ஆகியோருக்கே இவ்வாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

தானம் கொடுக்கும் இடத்தில் நடக்கும் போராட்டம்

அனுராதபுர புனித நகரத்திற்கான முன்மொழியப்பட்ட மேம்பாட்டுத் திட்டத்தை அரசாங்கம் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி, இந்த பிக்குகள் ருவன்வெலிசாய வளாகத்திற்கு அருகில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட ஐவருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு | Kassapa Thera Over Anuradhapura Protest

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகளின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், நவம்பர் 7ஆம் திகதி அனுராதபுர பொலிஸாரால் பெறப்பட்ட, போராட்ட இடத்திலிருந்து வெளியேறுமாறு பிக்குகளுக்கு உத்தரவிடும் தடையுத்தரவை நீக்குமாறு கோரி மனுவொன்றைத் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, இந்த விவகாரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பிக்குகளுக்காக முன்னிலையான சட்டத்தரணிகள் சமன் கலப்பத்தி மற்றும் கலிங்க ரவீந்திர கலிங்க ஆகியோர், பொலிஸார் நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்தி இந்த உத்தரவைப் பெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த எதிர்ப்புப் போராட்டம் ருவன்வெலிசாய முற்றத்திற்குள் அல்லாமல், “தன்சல” (தானம் வழங்கும் இடம்) நடத்தப்படும் பகுதியில் நடைபெறுவதாகவும், இது பொதுமக்களுக்கு எவ்வித இடையூறையும் ஏற்படுத்தவில்லை என்றும் அவர்கள் வாதிட்டுள்ளனர். மேலும், இந்தத் தடையுத்தரவு அரசியலமைப்பு உரிமைகளை மீறுவதாகக் குறிப்பிட்ட சட்டத்தரணிகள், அதனை ரத்து செய்யுமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேரர்களுக்கு அழைப்பாணை உத்தரவு

இருப்பினும், அனுராதபுர தலைமையக பிரதம பொலிஸ் பரிசோதகர் ருக்மால் ரத்நாயக்க, இந்தப் போராட்டம் பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவது விசாரணைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார்.


மேலும், போராட்ட இடத்திலிருந்து வெளியேறுமாறு நவம்பர் 7-ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை பிக்குகள் பின்பற்றவில்லை என்றும், எனவே அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, போராட்ட இடத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர், மருத்துவ சட்ட பரிசோதனையின்படி, கைது செய்யப்பட்ட வேளையில் போதைப்பொருட்களின் செல்வாக்கின் கீழ் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளனர்.

இரு தரப்பினரின் சமர்ப்பிப்புகளைக் கருத்தில் கொண்ட பின்னர், அந்த ஐந்து தேரர்களும் நவம்பர் 20 அன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டு, தலைமை நீதவான் அவர்களுக்கு அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தீபாவளி தினத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை

தீபாவளி தினத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு மீண்டும் வீழ்ச்சி

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு மீண்டும் வீழ்ச்சி


3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US