வழக்கு பொருளான கசிப்பை அருந்திய நபர்
நீதிமன்றத்தில் வழக்கு பொருளாக வைக்கப்பட்டிருந்த கசிப்பு போத்தலை குடித்தவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
நீதிமன்ற வளாகத்தில் வழக்குப் பொருளாக இருந்த சட்டவிரோத மதுபானப் போத்தலை (கசிப்பு) குடித்துக் கொண்டிருந்தபோது, கைது செய்யப்பட்ட 43 வயது சந்தேக நபரை இந்த மாதம் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குருநாகல் தலைமை நீதவான் நேற்று (13.11.2025) உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் வைக்கிப்பட்டிருந்த கசிப்பு
மெல்சிரிபுர பொலிஸாரினால் நீதிமன்றத்திற்கு வழக்குப் பொருளாக சர்ப்பிக்கப்பட்ட சட்டவிரோத மதுபானப் போத்தல் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்குப் பொருட்கள் வைக்கும் அறையில் வைக்கப்பட்டுள்ளது.
வழக்குக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாக வந்த மெல்சிரிபுர பகுதியைச் சேர்ந்த ஒருவர் அதைத் திருடி, அருகிலுள்ள கழிப்பறைக்கு எடுத்துச் சென்று குடித்துள்ளார்.
கசிப்பு போத்தல் வழக்குப் பொருள் அறைக்கு அருகில் இல்லாததால், நீதிமன்ற அதிகாரிகள் அந்த போத்தலை தேடிப்பார்த்த போது, சந்தேக நபர் அதை குடித்துவிட்டு, விசாரணையின் போது தரையில் கிடந்துள்ளார்.

அதன் பின்னர் பொலிஸார் அவரை அங்கு கைது செய்து நீதிபதி முன் முன்னிலைப்படுத்திய போது அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |