கரூர் விவகாரம் : 2ஆவது முறையாக விசாரணைக்காக முன்னிலையான தவெக தலைவர்
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு குறித்த விசாரணைக்காக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் 2வது நாளாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முன்னிலையாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் திகதி கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.
முதல்கட்ட விசாரணைகள்
குறித்த சம்பவம் தொடர்பில் பலரிடம் விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 12 ஆம் திகதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கூட்ட நெரிசல் குறித்து சுமார் 7 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணையின் போது சுமார் 100இற்கும் அதிகமான கேள்விகள் விஜய்யிடம் கேட்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

முதல்கட்ட விசாரணைகள் முடிந்த நிலையில் மீண்டும் அவரை இன்று(19) டெல்லியில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் சி.பி.ஐ. விசாரணைக்காக 2ஆவது முறையாக த.வெ.க தலைவர் விஜய் நேற்று மாலை 4 மணிக்குத் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
இந்த நிலையில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக விஜய் இன்று மீண்டும் முன்னிலையாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த திவ்யாவுக்கு ரூ.50 லட்சம் மட்டுமின்றி மேலும் ஒரு பெரிய பரிசு! என்ன பாருங்க Cineulagam
விருது விழாவில் பட்ட அவமானம்.. Bigg Boss 9 டைட்டில் ஜெயித்தபின் கண்கலங்கி பேசிய திவ்யா கணேஷ் Cineulagam
டிரம்பை நம்பி ஏமாந்த ஈரான் போராட்டக்காரர்கள்: அமெரிக்கா நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது ஏன்? News Lankasri