யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு:கருணாகரம்
இலங்கையின் சுதந்திர தினம் தமிழ் மக்களுக்கு ''கறுப்பு தினம்'' என்ற பிரகடன போராட்டம் மற்றும் பேரணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பூரண ஆதரவு வழங்கும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்றைய தினம் (31.01.2023) இடம்பெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள எதிர்ப்புப் பேரணிக்கு வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் அனைவரும் கிளர்ந்தெழ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
எழுச்சி பேரணி
இலங்கையின் சுதந்திர தினத்தினை தமிழர்கள் கரிநாளாக அனுஸ்டிக்கும் வகையில் வடக்கில் ஆரம்பமாகவுள்ள எழுச்சி பேரணியில், வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் தேசியத்தின் பால் அனைவரையும் ஒன்றிணையுமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் மட்டக்களப்பில் வேண்டுகோள் விடுத்திருந்தது.
எதிர்வரும் 04ஆம் திகதி ஆரம்பமாகும் இந்த எழுச்சி பேரணியானது 07ஆம் திகதி மட்டக்களப்பில் நிறைவடையும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் விஜயகுமார் தெரிவித்திருந்தார்.
இந்த அழைப்பிற்கு ஆதரவு வழங்கும் வகையிலேயே கோ.கருணாகரம் கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
