சுமந்திரன் - சாணக்கியன் இறுதி நேரத்தில் உதவி கேட்டனர்! ஜனா
என்னைப்பதவி விலகுமாறு கோருவதற்கு சாணக்கியனுக்கு எந்த அருகதையும் இல்லையென முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
இன்று மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“நான் 30வருடத்திற்கும் மேலாக ஒரே கட்சியிலேயே பயணித்துவருகின்றேன்.
உங்களைப்போல் பல்வேறு கட்சியிலும் தொங்கி வந்தவன் நான் இல்லை என்பதையும் உணர வேண்டும்.
ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும் தேசியம் என்றால் என்ன தமிழ் தேசியம் என்றால் என்ன? போராட்டம் என்றால் என்ன? இந்த போராட்டத்தின் மூலம் ஏற்பட்ட இழப்பு என்ன? தமிழ் மக்களின் தேவை என்ன? என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
வெறுமனவே கதிரைக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு ஏனையவர்களை தூற்றுவதை விமர்சிப்பதை விடுத்து உங்கள் கட்சியில் இருந்து கட்சிக்கு எதிராக செயற்படுகின்ற உங்களை போன்றவர்களுக்கு உங்கள் கட்சியால் நடவடிக்கை எடுக்க சொல்லுங்கள் ஏனையகட்சியில் என்ன நடக்கின்றது என்பதை எட்டி பார்க்க வேண்டாம்” என குறிப்பிட்டுள்ளார்.





கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri
