பொலிஸ் மைதானத்திற்கு ஒரு பெண்ணுடன் வந்த கருணா: முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் விவரித்த சம்பவம்
விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்படும் கருணா அமைச்சராக இருந்த போது பொலிஸ் திணைக்களத்திற்கு சொந்தமான விளையாட்டு மைதானத்திற்கு வந்தபோது நடந்த சம்பம் தொடர்பில் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (Senior DIG) பிரியந்த ஜயகொடி இணையத்தளம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
குறித்த செவ்வியில்,
எனக்கு நினைவிருக்கும் வகையில் 2013 அல்லது 2014 ஆம் ஆண்டில், நான் பொலிஸ் விளையாட்டுப் பிரிவின் பணிப்பாளராக இருந்தபோது, விநாயகமூர்த்தி முரளிதரன் அல்லது கருணா அப்போது அமைச்சராக இருந்தார்.
பொலிஸ் மைதானத்தில் நடந்த சம்பவம்
அவருக்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது. அவர் மாலை வேளையில் ஒரு பெண்ணுடன் பொலிஸ் விளையாட்டு மைதானத்திற்கு உடற்பயிற்சிக்காக நடப்பதற்கு வருவார்.
அவர் இருபுறமும் பாதுகாப்புப் பிரிவினரை வைத்துக்கொண்டு நடக்கும்போது, அந்த மைதானத்தில் விசேட திறமைகளை வெளிப்படுத்திய ஒரு பொலிஸ் தடகள வீரரான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ASP) போதேஜு 1990 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் கிழக்கில் கைப்பற்றிக் கொண்ட பொலிஸ் நிலையங்களில் உள்ள பொலிஸாரை சரணடையுமாறு கூறினர்.

ஆனால் போதேஜு சரணடைய முடியாது என்று கூறியவர். அவர் சார்பாக நாம் இன்னும் பொலிஸ் விளையாட்டு விழாக்களில் சவால் கிண்ணம் ஒன்று வழங்கப்படுகிறது.
அவர் கண்டி புனித அந்தோனியார் கல்லூரி உருவாக்கிய ஒரு திறமையான தடகள வீரர்.விநாயகமூர்த்தி முரளிதரன் அல்லது கருணா அம்மான் பொலிஸ் மைதானத்தில் குறித்த பெண்ணுடன் நடைபயிற்சி செய்யும் போது அங்கு இருந்த மற்றொரு அதிகாரி என் அருகில் வந்து இவ்வாறு கூறினார்.
துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை
கிழக்கில் நிராயுதபாணியாக இருந்து 674 பொலிஸாரை கொலை செய்வதற்கு தலைமைத்துவம் வழங்கி போதேஜு போன்ற திறமையான ஒரு வீரரைக் கொன்ற கொலையாளி, கருணா அம்மான் இன்று பொலிஸ் பாதுகாப்புடன் பொலிஸ் விளையாட்டு மைதானத்திலேயே நடந்து திரியும்போது, எனக்குள் பாரியதொரு ஆக்ரோஷம் ஏற்படுகிறது.
இதனை நான் எவ்வாறு பார்த்துக் கொண்டிருப்பது?" என்று அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு என்னிடம் கூறினார். எனக்குத் தெரிந்தவரை, இது தொடர்பாக எந்தவொரு விசாரணையும் நடக்கவில்லை.

அந்தப் படுகொலைகளுக்கு முழுமையான தலைமைத்துவத்தை வழங்கிய கருணா இந்நாட்டின் அமைச்சரானார். அத்தோடு பழமையான அரசியல் கட்சியொன்றின் உபதலைவர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டது.
அதேபோல், இதில் இரண்டாவது இடத்தில் இருந்த சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பிரதிமைச்சரானார். அவர் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராகவும் இருந்தார்.
எனவே, இவ்வாறானதொரு துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையைத் தவிர, இன்றுவரை இந்த மனிதப் பேரவலக் கொலைகள் குறித்து விசாரணை எதுவும் நடந்ததாக எனக்குத் தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
சொதப்பிய மெஸ்ஸி: கடைசி நிமிடங்களில் மேஜிக்.. சுவிஸை வீழ்த்தி அர்ஜென்டினா அரையிறுதிக்கு முன்னேற்றம் News Lankasri
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan