முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை
தேர்தல்களை ஒத்தி வைக்க வேண்டாம் என முன்னாள் சபாநாயகரும், நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் தலைவருமான கரு ஜயசூரிய, அரசாங்கத்திடமும் ஏனைய அரசியல் கட்சிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
நீண்ட காலமாக மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தற்பொழுது வேட்பு மனு கோரப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களும், மாகாணசபைத் தேர்தல்களும் உரிய முறையில் நடத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
தேர்தலுக்கு காலம் தாழ்த்தக் கூடாது
மக்கள் ஆணையை சரியான முறையில் பிரயோகிக்கவும், அதன் ஊடாக பிரதிபலிக்கப்படும் மக்கள் ஆணையின் ஊடான நல்லாட்சிக்கு வழியமைக்கும் தேர்தலுக்கு காலம் தாழ்த்தக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மக்களின் ஆணையை மலினப்படுத்தும் எந்தவொரு செயற்பாட்டுக்கும் ஒத்துழைப்பு வழங்கப்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்ளூராட்சி மன்றங்களுக்கு கூடுதல் எண்ணிக்கையிலான உறுப்பினர்களை தெரிவு செய்யும் தற்போதைய முறையில் உடன்பாடு கிடையாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam
