மண்டூர் முருகன் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டு பெரும் திரளான பக்தர்கள் பாத யாத்திரை(Photos)
வரலாற்றுச் சிறப்புமிக்க மண்டூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு பக்த அடியார்கள் பாத யாத்திரையினை மேற்கொண்டிருந்தனர்.
இதன் ஆரம்ப கட்டமாக இன்று( 26.08.2023) காரைதீவிலிருந்து மண்டூர் நோக்கி பெரும் திரளான பக்தர்கள் குறித்த பாத யாத்திரையினை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது கல்முனையில் அமைந்துள்ள கல்முனை முருகன் தேவஸ்தானத்தில் பாத யாத்திரையினை மேற்கொண்டிருந்த பக்தர்களுக்கு காலை உணவு மற்றும் மென்பானம் என்பன வழங்கி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பக்தர்கள் அனைவரும் காரைதீவு ,மாளிகைக்காடு ,சாய்ந்தமருது, கல்முனைக்குடி, கல்முனை, நற்பிட்டிமுனை,சேனைக்குடியிருப்பு, அன்னமலை மற்றும் தம்பலவத்தை ஊடாக மண்டூர் வரையிலான சுமார் 22 கிலோமீட்டர் தூரம் இவர்கள் பாத யாத்திரையின் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..
வீராணம் திட்டத்திற்கு லஞ்சம் கேட்ட கலைஞரின் மருமகன் - சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய் News Lankasri
படு பிரம்மாண்டமான பிக்பாஸ் 10வது சீசனை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம்... எத்தனை கோடி? Cineulagam