காரைநகர் - களபூமியில் நகையும் பணமும் திருட்டு
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் - களபூமியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இன்றையதினம் (19.12.2022) 3 1/2 பவுண் தங்கநகைகள் மற்றும் 25 ஆயிரம் ரூபா பணம் என்பன களவாடப்பட்டுள்ளது.
வீட்டில் தனியாக வசித்துவந்து 72 வயதுடைய மூதாட்டி சமுர்த்திக் கொடுப்பனவை பெறுவதற்காக இன்றையதினம் பிரதேச செயலகத்திற்கு சென்றுள்ளார்.
முறைப்பாடு பதிவு
இந்நிலையில் வீட்டிற்கு சென்ற திருடர்கள் கதவினை உடைத்து உள்ளே சென்று அலுமாரிக்குள் இருந்த உள் கதவை திறப்பினை எடுத்து கதவினை திறந்து இவ்வாறு நகைகளையும் பணத்தையும் களவாடி சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் களபூமி பொலிஸ் காவலரணில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 1 மணி நேரம் முன்

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
