கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா ஏற்பாடு
கிளிநொச்சி - கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தரப் பொங்கல் விழா வழமை போன்று இந்த ஆண்டிலும் வெகு சிறப்பாக நடைபெற அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் என மாவட்ட அரச அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
பொங்கல் விழா தொடர்பான மீளாய்வு கூட்டம் இன்று(20.03.2026) கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் தலைமையில் நடைபெற்றுள்ளது.
நாகதம்பிரான் ஆலய முன்றலில் மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பொங்கல் விழா ஏற்பாடு
அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
கிளிநொச்சி மாவட்டத்திலே வரலாற்று தொன்மை கொண்ட ஆலயமாக இந்த ஆலயம் காணப்படுகிறது. இதற்கான தனி சிறப்பும் காணப்படுகின்றது.

இந்த ஆலயத்திற்கு இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் பல லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருகின்றனர். இவ்வாலயத்தின் தேவைப்பாடுகள் குறிப்பாக சுகாதார வசதி மற்றும் பாதுகாப்பு போன்ற விடயங்கள் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.
கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் 2026ம் ஆண்டுக்கான வருடாந்த பங்குனி உத்தரப் பொங்கல் விழா எதிர்வரும் 25ஆம் திகதி விளக்கு வைத்தலுடன் ஆரம்பமாகி ஏப்ரல் 01ஆம் திகதி பொங்கல் விழா நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில், கண்டாவளை பிரதேச செயலாளர் த. பிருந்தாகரன் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் மாவட்ட அனர்த்த முகாமைத்துவபிரிவு பிரதிப்பணிப்பாளர் துறைசார்ந்த திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் ஆலய தொண்டர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

