அரச உயர் பதவியில் இருந்து விலகும் முக்கியஸ்தர்! விரைவில் மாற்றம்..
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தனது பதவியிலிருந்து விலகுவதற்குத் தீர்மானித்துள்ளதாக, அரசாங்க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சின் மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்ட டபிள்யூ.எஸ். சத்யானந்தவின் அடிப்படை மனித உரிமைகளை பேராசிரியர் கபில பெரேரா மீறியுள்ளதாக அண்மையில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்தே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
அடிப்படை உரிமை மனு
தான் நியமனம் பெற்று கடமையைப் பொறுப்பேற்கச் சென்ற தினத்தன்று, உங்களது சேவை தேவையில்லை எனவும், அலுவலகத்தை விட்டு வெளியேறுமாறும் செயலாளர் தனக்கு அறிவித்ததாகக் கூறி, மேலதிக செயலாளர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான தீர்ப்பை அண்மையில் வழங்கிய உயர் நீதிமன்றம், அரச அதிகாரி ஒருவரை இவ்வாறு அவமதிப்புக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாக்கியதன் மூலம், அமைச்சின் செயலாளர் அடிப்படை மனித உரிமைகளை மட்டுமன்றி, அரச அதிகாரி ஒருவரை நியமிப்பதற்கான நடைமுறைகளையும் மீறியுள்ளார் என சுட்டிக்காட்டியிருந்தது.
பதவி விலகியுள்ள பேராசிரியர் கபில பெரேரா, மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அவர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் கல்வி அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும், பதவி விலகல் தொடர்பில் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை.
அவுஸ்திரேலியாவில் இலங்கை விஞ்ஞானியின் அசாத்திய கண்டுபிடிப்பு - பார்வையற்றவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
சவுதி மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர்: ரூ.34 கோடி செலுத்தி கேரள மக்கள்: யார் இந்த ரஹீம்? News Lankasri
புதிய வீடு கட்டியுள்ள விஜய்யின் மேலாளர் ஜெகதீஸ்.. கிரகப்பிரவேசத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய் Cineulagam
குரு பெயர்ச்சி பலன்கள் : 12 ஆண்டுகளின் பின் ராஜ வாழ்க்கை பெற போகும் ரிஷபம்! முழு பலன்கள் இதோ Manithan