பாஜக நாடாளுமன்ற உறுப்பினரின் கன்னத்தில் அறைந்த பெண்
பாரதீய ஜனதாக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள பொலிவூட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு சண்டிகர் விமான நிலையத்தில் வைத்து பாதுகாப்புத்துறை பெண் ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது
மத்திய தொழில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பெண் ஒருவரே கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலைய பாதுகாப்புச் சோதனையின் போது கங்கனா தனது தொலைபேசியை தட்டில் வைக்க மறுத்து பாதுகாப்புப் பணியாளர்களைத் தள்ளியபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
BIG BREAKING ???
— Azy (@Azycontroll_) June 6, 2024
Kangana Ranaut slapped !!?
A CISF constable lady Kulwinder Kaur slapped the new MP for calling the Farmers Khalistanis, as the rumour goes.
About time Kangana realises, opening her wide mouth without thinking comes with a cost. pic.twitter.com/Me8WVtT9rf
கங்கனாவின் கோரிக்கை
இந்தநிலையில் குறித்த பாதுகாப்புத்துறை பெண் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் கங்கனா கோரிக்கை விடுத்துள்ளார்.
இமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் போட்டியிட்டு கங்கனா ரனாவத் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOINNOW |