கண்டி பதியுதீன் மஃமூத் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி
கண்டி பதியுதீன் மஃமூத் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி கண்டி போகம்பர விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த விளையாட்டுப் போட்டிகள் நேற்றைய தினம் (03) நடைபெற்றுள்ளன.
இதன்போது, ஆயிசா, பாத்திமா, ஆமீனா, கதீஜா ஆகிய நான்கு இல்லங்களுக்கிடையே விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றிருந்தன.
இல்லங்களின் வெற்றி
இவற்றில் கதீஜா இல்லம் 427 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தைப் பெற்றது.
ஆமீனா இல்லம் 377 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும், ஆயிசா இல்லம் 272 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும், பாத்திமா இல்லம் 270 புள்ளிகளைப் பெற்று நான்காம் இடத்தையும் பெற்றுக் கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இல்ல மாணவிகளின் இறுதிப் போட்டியாக சுவட்டு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இதின்போது பெரு எண்ணிக்கையிலான பெற்றோர்கள், ஆசிரியர்கள் எனக் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், தேசிய கெடட் குழுவின் முதல் தர அலுவலக உத்தியோகத்தர் லெப்டினல் கேணல் எம். டப்லியூ, டி. எம். குமாரி பண்டார கலந்து கொண்டனர்.
கண்டி கல்வி வலய தமிழ் மொழிப் பிரிவுக்கான உதவிப் பணிப்பாளர் நூருல் அமீன், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார், கண்டி முன்னாள் மாநகர சபை உறுப்பினர் மாத்தலி மரைக்கார், வெளிவிகார அமைச்சரின் கண்டி மாவட்ட இணைப்பாளர் வஸீர் முக்தார். ரிஸ்வி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |