அநுர அரசுக்கு எதிராக எவ்வளவு குற்றச்சாட்டுக்கள் வந்தாலும் ஆட்சி தொடரும்..! கந்தசாமி பிரபு விமர்சனங்களுக்கு பதிலடி
எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக எந்தவொரு குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும், பொய்களைக் கூறினாலும், சேறு பூச முற்பட்டாலும் அவர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள் என்றாலும், அதனை மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தாசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று(30.04.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சியினர் விடும் போலி மிரட்டல்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீதும் எங்களது அமைச்சர்கள் மீதும் எப்படியான புகார்களை முன்வைத்திருந்தாலும், பொய்களைக் கூறியிருந்தாலும் மக்கள் மிகத் தெளிவாக இருக்கின்றார்கள். ஆகவே இந்த அரசாங்கத்தின் மீதும் மக்கள் இப்போதும் தங்களது நம்பிக்கையை வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அது மாத்திரமல்ல இந்தத் தொழிலாளர் தினத்திலும் கூட அணி அணியாகத் திரண்டு மக்கள் வந்து எங்களோடு இணைந்து பயணிக்கத் தயாராக இருக்கின்றார்கள்.
இதன் மூலமாக ஒன்று தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகின்றது. இந்த எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக எந்த ஒரு குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும், பொய்களைக் கூறினாலும், சேறு பூச முற்பட்டாலும் அவர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள் எனக் சான்றுகள் காட்டினாலும அவற்றையெல்லாம் மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
ஆகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்கள் நேயமிக்க அரசாங்கம் என்பதை மீண்டும் மீண்டும் நாங்கள் ஞாபகமூட்டிக் கொண்டிருக்கின்றோம்.
மக்களின் பக்கமே நாங்கள் மக்களுக்காகச் சேவை செய்கின்ற ஒரு தரப்பினராகத் தொடர்ச்சியாக நாங்கள் இருந்து வருகின்றோம் என்பது வெளிப்படையாகப் புலனாகிக் கொண்டிருக்கின்றது என்றார்.

காணாமல் போன டொலர்கள்: ஜனவரியிலேயே தோன்றிய அபாய அறிகுறிகள் - வரி செலுத்துவோர் தலையில் விழப்போகும் பேரிடி..!