மகனை கடத்தி கப்பம் கோரியவர்கள் கைது
கப்பம் கோரி கடத்தப்பட்டதாக கூறப்பட்ட வத்தளை கந்தானை - ஹப்புகொட பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரின் 22 வயதான மகன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் நான்கு பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
56 லட்சம் ரூபா பணம் கோரப்பட்டது
நேற்று முற்பகல் 11 மணியளவில் குறித்த இளைஞர் அடையாளம் தெரியாத குழுவொன்றினால் வாகனத்துடன் நேற்று கடத்தப்பட்டிருந்தார்.
இதனையடுத்து குறித்த இளைஞரை விடுவிப்பதற்காக அவரது தந்தையிடம் 56 லட்சம் ரூபா கோரப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இளைஞரின் தந்தையுடன் ஏற்பட்ட பணப்பிரச்சினை தொடர்பில் குறித்த இளைஞர் கடத்தப்பட்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் குறித்த தந்தையால், 56 லட்சம் ரூபா வைப்பிலிடப்பட்ட பின்னரே இளைஞர் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இந்தநிலையில் பணம் வைப்பிலிடப்பட்ட வங்கி தரவுகளுக்கு அமைய நான்கு
சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 19 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam
