கந்தளாய் தொடருந்து நிலையத்தில் தராசு பழுது: மக்கள் அசௌகரியம்
திருகோணமலை - கந்தளாய் தொடருந்து நிலையத்தின் தராசு பழுதடைந்து இரண்டு மாதம் கடந்த நிலையில் இன்னும் திருத்தப்படாததால் மக்கள் பல அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கந்தளாய் தொடருந்து நிலையத்தில் தராசு பழுதடைந்து உள்ளதாக சிங்களத்தில் மட்டுமே பெயர் பலகையில் எழுதியுள்ளதால் சிங்களம் வாசிக்கத் தெரியாத தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மற்றும் பயணிகளும் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
பொருட்களை அனுப்புவதில் சிக்கல்
கந்தளாய் தொடருந்து நிலையத்திலுள்ள தராசு பழுதடைந்தமையால் பொருட்களை அனுப்புவதாக இருந்தால் தம்பலாகாமம் அல்லது திருகோணமலை புகையிரத நிலையங்களுக்கே செல்லவேண்டியுள்ளததகவும் குறிப்பிடுடப்படுகிறது.
இரண்டு மாதம் பழுதடைந்த தராசினை சரி செய்வதற்கான எந்த ஏற்பாடுகளையும் கந்தளாய் தொடருந்து நிலையத்தினால் செய்தமையை காணமுடியவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தும் மாறு பயணிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
